போதைக்கு அடிமையானவர்களால் ஆபத்தாக மாறியுள்ளது ரயில் பயணங்கள் – ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டு!
Friday, June 30th, 2023
இலங்கையில் ரயில் பயணம் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதைகளில் உள்ள பாங்களை சிலர் எடுத்து சென்றுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
போதைக்கு அடிமையானவர்களே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் வி.எஸ் பொல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பல சந்தர்ப்பங்களில் ரயில்வே தண்டவாளங்கள் தடம் புரண்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
ரயில் தடம் புரண்டதற்கு ரயில் உபகரணங்கள் பழுதடைந்ததே காரணம் என தற்போது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2025ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகள் - அமைச்சர் சஜித் பிரேமதாச!
வாக்காளர் இடாப்பில் இருந்து 126,481 பெயர்கள் நீக்கம்!
யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் நிலையில் கொரோனா தொற்று - அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமத...
|
|
|


