போட்சிட்டி திட்டத்தை முன்னெடுக்க இணக்கம்!

கொழும்பில் அமைக்கப்பட்டுவரும் போட்சிட்டி திட்டத்தை விரைந்து முன்னெடுக்க இலங்கையும் சீனாவும் இணங்கியுள்ளன.
சீனா சென்றுள்ள இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சீன பிரதமர் லீ கெக்குயாங் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் சீன நிறுவனத்துக்கு அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் போட்சிட்டி திட்டத்தை கடந்த ஒருவருடக்காலமாக நிறுத்தி வைத்தமைக்காக 125 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்கவேண்டும் என்ற சீன நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதா? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.இதேவேளை ரணிலின் இந்த விஜயத்தின் போது ஏழு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
Related posts:
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம் - கைத்தொழில மற்றம் வர்த்த அமைச்சு
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு எல்ஐஓசிக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன - வலுசக...
மதுரை – பலாலி இடையிலான மற்றொரு விமான சேவையும் விரைவில் - இந்திய தனியார் விமான நிறுவனங்களுடன் விமானப...
|
|