திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு எல்ஐஓசிக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Friday, December 31st, 2021

திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள 99 குதங்களில் தற்போது லங்கா ஐ ஓ சி நிறுவனம் பயன்படுத்தும் 14 குதங்களை 50 வருட காலத்திற்கு அவர்களுக்கே குத்தகைக்கு வழங்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேலும் 61 குதங்கள், எண்ணெய் களஞ்சியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல்ஸ் லிமிட்டட் (Trinco Petroleum Terminals Ltd) மூலம் கூட்டாக நிர்வகிக்கப்படும்.

அந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமும், 49 சதவீத பங்குகளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் கொண்டிருக்கும்.

இதுதவிர, திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையின் எஞ்சிய 24 குதங்களுக்கான பங்குகளை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் கொண்டிருக்கும் எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

000

Related posts: