போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம் ஆரம்பம்!

போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராத பண சீட்டை சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி , விதிமுறைகளை மீறும் சந்தர்பத்தில் அதனை புகைப்படம் எடுத்து அந்த குற்றத்திற்கான அபராதப்பண சீட்டுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சட்ட ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று வானில் தென்படவுள்ள அதிசயம்!
கடவுச்சீட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு வீழ்ச்சி!
மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன்...
|
|