பொலிஸ் மா அதிபர் கைது !

Tuesday, July 2nd, 2019

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலைக்குச் சென்று பூஜித் ஜயசுந்தரவை கைது செய்துள்ளனர்.

நாட்டில் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலை தடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் , உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் அண்மையில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எழுக தமிழ் கூட்டுப்பேரணிக்கு ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பூரண ஆதரவு!
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பு - இலங்கைக்கான கட்டார் தூதுவர்...