பொலிஸ் பதவியில் நீண்டகாலமாக இருப்போருக்கு பதவி உயர்வு!

பொலிஸ் சார்ஜண்ட் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஓய்வுபெறும் போது கட்டாயம் அந்த பதவிக்கு அடுத்ததாக உள்ள தரத்திற்கு பதவி உயர்வுவழங்கப்படவுள்ளது.
குறித்த பதவிக்கான ஓய்வூதியமும் அதற்கான பயன்களையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை பொலிஸ் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும்தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர் தெரிவிக்கையில் ,
நீண்டகாலமாக பதவியில் இருப்போருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலுள்ளவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக இது தொடர்பானஆலோசனையை கவனத்தில் கொண்டு 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இதனை பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அங்கீகரிக்கப்பட்டதுஎன்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வயது 18 நிரம்பினாலும் தாமதிக்கிறது வாக்காளர் பதிவு !
புகையிரத பயணிகளின் பாதுகாப்புக்கு 210 விண்ணப்பங்கள்!
வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீளக் கூடுகின்றது!
|
|