பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது தாக்குதல்!
Saturday, June 1st, 2019
இலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் –
“பொலிஸ்துறையின் VPN வலையமைப்பு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய போதிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலினால், வைரஸ் பாதுகாப்புடன் இருந்த கணினி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள்!
பெப்ரவரி மாத பிற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை!
|
|
|


