பொலிஸாரை இலக்கு வைத்து வடமராட்சியில் தாக்குதல் – ஒருவர் காயம்!
Wednesday, May 27th, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடதப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முள்ளிப் பகுதிக்கச் செல்லும் அரசமர முச்சந்தியில் இடம்பெற்றது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சட்டவிரோத மணல் கடத்தலில் இடுபடும் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வெடித்த பொருளின் சிதறிய பாகங்கள் காணப்படுகின்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொடருந்து பெட்டிகள்!
கோட்டாபயவை தோல்வியடையச் செய்ய முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன!
அதிகளவான நீரை பருகுங்கள் - பொதுமக்களிடம் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்த்தன வலியுறுத்து!
|
|
|
வளமான எதிர்காலத்தை உருவாக்க பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம் - ஈ.பி.டி.பி யின் யாழ். மாவட்ட நிர்வாக செய...
நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மனித உரிமை...
தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர்...


