பொலிஸாருக்க தரமான சீருடை – அமைச்சர் சாகல ரத்னாயக்க!

பொலிஸாரின் சீருடை, தொப்பி, மற்றும் பாதணிகளை உரிய தரத்துடன் வழங்குவதற்காக ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரத்னாயக்க துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பொலிஸ் சீருடையின் மாதிரிகளை கண்காணித்ததன் பின்னர் சட்ட ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க நேற்று இந்தப் பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.பொலிஸ்மா அதிபர் முதல் கான்ஸ்டபிள் வரை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஒரேவிதமான துணியைப் பயன்படுத்துமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீருடைகளைத் தைக்கும் பணிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பரீட்சைகளை ஒரே நேரம் நடத்தும் திட்டம் 2019 இல் நடைமுறையில்!
மார்ச் மாதத்தில் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா
கற்பனையில் பற்றாக்குறை பற்றி பேசுகிறார்களா என்று எமக்கு தெரியவில்லை - போதுமான அளவு இருப்பு உள்ளது என...
|
|