சமூக அக்கறையுடன் ஒன்றுதிரண்டால் வேலணை பிரதேசத்தை இதர சபைகளுக்கு முன்னுதாரணமானதாக மாற்றியமைக்க முடியும் – தவிசாளர் கருணாகரகுரமூர்த்தி!

Friday, August 10th, 2018

பேதங்களை மறந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக உழைத்தால் எமது பிரதேசத்தை தூய்மையாக்கி அழகூட்டி இதர பிரதேசங்களுக்கு முன்மாதிரியான பிரதேச சபையாக எமது வேலணை பிரதேச சபையை உருவாக்கி காட்ட முடியும் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாதயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான  நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட புங்குடுதீவு முனைப்புலம் இந்து மயானப் பகுதி, காந்தி சனசமூக நிலைய மக்களது ஒத்துழைப்பபுடன் சிரமதானம் செய்யப்பட்டது.

குறித்த சிரமதான பணியை தலைமைதாங்கி வழிநடத்திய தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இலுருந்தபோது இப்பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இன்று மத்திய அரசில் நாம் பங்கெடுக்கவில்லை. இதனால் கடந்த காலங்களைப் போல அதிகளவான செயற்பாடுகளை செய்வதில் சில தடங்கல்கள் ஏற்படுகின்றன. இருந்தும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மத்திய அரசுடன் கொண்டுள்ள நல்லுறவு காரணமாக இன்றும் எம்மால் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிகின்றது.

அந்தவகையில் இந்த காந்தி சனசமூக நிலையம் போல இப்பிரதேசத்தின் ஏனைய பொது அமைப்புக்களும் எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வந்தால் எமது பிரதேசத்தை தூய்மையான அழகுபொருந்திய பிரதேசமாக மிகவிரைவில் உருவாக்கி காட்டமுடியும்.

இதற்கு மக்கள் அனைவரும் சமூக அக்கறையுடன் சேவையாற்ற முன்வரவேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பகுதி மக்களும் முன்வருவார்களேயானால் நாம் அதற்கு அனுசரணை வழங்கி வேலணை பிரதேசத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றர்.

38996949_953385398179681_8856450661475155968_n

38948686_271913390292069_115538417013489664_n

38783106_467559093723186_844716077375029248_n

38734826_968094086703883_1500358223977250816_n

Related posts: