பொலிஸாருக்கு எதிராக முறையிட புதிய இணையத்தளம் அறிமுகம்!
Saturday, January 26th, 2019
இணையத்தளமூடாக பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.npc.gov.lk என்ற முகவரிக்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
பதிவு செய்யும் முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜி.எச். மனதுங்க குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளுக்கு 1500 குழுக்கள்!
பாலியல் இலஞ்சம் கோரும் சிறைச்சாலை அதிகாரிகள்!
சமூக ஊடகங்களின் நடத்தை குறித்து அவதானம் - தேர்தல் ஆணைக்குழு!
|
|
|


