பொலித்தீன் பாவனைக்கு பதில் வாழை இலை!
Friday, October 20th, 2017
பொலித்தீன் பாவனைக்கு பதிலாக வாழை இலைகளை அவித்து பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக பொதுமக்களிற்கு விழிப்புணவர்வை ஏற்படுத்தும் கண்காட்சி இடம்பெற்றது.
இராணுவத்தினரின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந்தநிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
ஜனாதிபதியவர்களின் தலைமையில் மஹாவலி அதிகார சபையின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் நாட்டின் இயற்கையை பாதுகாக்கும் செயற்திட்டத்தில் இராணுவத்தின் விவசாய பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் புவனேக குணரத்தன தலைமையில் இக் கண்காட்சி இடம்பெற்றது.
Related posts:
2016 – 2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் வெளியாகின்!
சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வா...
அதிபர் இடமாற்றத்தில் முறைகேடு : கல்வி அமைச்சை குற்றம் சாட்டுகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!
|
|
|


