பொலித்தீன் பாவனைக்கான தடை கடுமையாக்கப்பட்டுள்ளது!

Tuesday, January 2nd, 2018

பொலித்தீனுக்கான தடை புதுவருடத்தினத்திலிருந்து கடுமையாக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறும் வகையில் பொலித்தீனை பயன்படுத்தும் நபர்களை தேடி இன்று முதல் சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் உபாலி இந்திரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பொலித்தீன் தடை குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவுப்படுத்தும் சுற்றறிக்கையும் அனுப்பபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 20 மைக்ரோவிற்கு குறைந்த பொலித்தீன் பாவனை மற்றும் உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்வதற்கான வர்த்தமானி கடந்த செப்டம்பர் முதலாம் திகதி வெளியிடப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வௌியிடப்பட்ட குறித்த வர்த்தமானிக்கு அமைய, உள்நாட்டு பாவனைக்காக பொலிஸ்டய்ரின் பயன்படுத்தி உணவு பொதியிடும் பெட்டிகள், தட்டுக்கள், கோப்பைகள் மற்றும் கரண்டிகள் உற்பத்தி செய்யவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பொருட்களை விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்துதல், இலவசமாக வழங்குதல், பயன்படுத்தல் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: