பொலித்தீன்களில் எண்ணெய் உற்பத்திசெய்யத் திட்டம் – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் !

Tuesday, July 10th, 2018

பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் பழைய மீன்வலைகள் ஆகியவற்றில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதராட்சி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மீனவ சமூகங்களுக்கு இந்தப் புதிய முறையினூடாக மாற்றீட்டு எரிபொருள் கிடைக்கும் என்று நம்புகின்றேன். மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கருகிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆள்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் தங்களின் பழைய வலைகள் போன்றவற்றைக் கடலிலேயே எறிச்து விடுகின்றனர். இதனால் கடல் மாசடைகின்றது. கடலில் வீசப்படும் இந்தக் கழிவுப் பொருள்களால் கடல்வாழ் உயிரினங்களும் அழிவடையும் நிலமை உருவாகிறது.

இப்படியொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மேற்குறிப்பிட்ட பொருள்களால் சுற்றாடல் மாசடைவது தடுக்கப்படும். மீனவர்களுக்கு இது சம்பந்தமான அறிவுரைகள், விளக்கங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து அவர்களுக்கு இது சம்பந்தமாகத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: