பொறுப்புக்கூறல் அவசியம் – கனடா வலியுறுத்து!
 Monday, July 24th, 2017
        
                    Monday, July 24th, 2017
            இலங்கையில் பொறுப்புக்கூறல் அவசியமானதொன்றாக உள்ளதென கனடா வலியுறுத்தியுள்ளது கறுப்பு ஜூலையை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடூ இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்
1983ஆம் ஆண்டு ஜுலை 24ஆம் திகதி முதல் ஜூலை 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின்போது ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்பலர் இடப்பெயர்வுக்கு உள்ளாகினர்.
இந்தநிலையில் இன்று வன்முறைகள் இடம்பெற்ற 34 வருடங்கள் முடிவடைந்துள்ள போது கனேடிய மக்களும் கறுப்பு ஜூலையை நினைவுக்கூறுகின்றனர்.அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்நீக்க தொடர்ந்தும் கனடா தமது உதவிகளை வழங்கும் என்றும் கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் வரவேற்கிறதுஎனினும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய வகையில் அந்த முன்னெடுப்பு அமையவேண்டும் என்று கனடா வலியுறுத்துகிறது என்றும் கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் சொல்லெனா துன்பங்களுக்கு முகங்கொடுத்த இலங்கை தமிழர்களுக்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடூ கூறியுள்ளார்
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        