பொறுப்பற்ற செயற்பாடுகளே கொரோனா வைரஸ் பரவ காரணம் – சுகாதார அமைச்சர் !

Saturday, March 28th, 2020

ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர், மேலும் பல தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரகள் என சந்தேகிக்கப்படுபவர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நோக்கிலேயே, இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, சந்தேகத்திற்கு உள்ளானவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவர்களை விரைவில் அடையாளம் கண்டு, அவர்களையும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவது முக்கியமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts: