பொருள்களின் விலை குறைப்பு – அடுத்த வாரம் வர்த்தமானியில் !
Tuesday, November 29th, 2016
7 அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது என நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
வரவு – செலவு திட்டத்தினூடாக விலை குறைப்புக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய பயறு 1கிலோகிராம் 15ரூபாவாலும், பருப்பு 1கிலோகிராம் 10ரூபாவாலும் விலை குறைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை, உருளைக்கிழங்கு, மண்ணெண்ணெய் மற்றும் நெத்தலி ஆகிய பொருள்கள் 5ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 12.5கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 25ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளது எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
காலநிலையில் திடீர் மாற்றம்!
பெரும்போகத்துக்குத் தேவையான சேதன உரத்தை தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறை தயார...
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி...
|
|
|


