பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, March 31st, 2023

இராமாயணம் அல்லது சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இராம நவமி விழாவையொட்டி மிலிந்த மொரகொட நேற்று மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்தார்.

இலங்கை அழகான மென்மையான மணல் கடற்கரைகள் பசுமையான தேயிலை தோட்டங்கள் மலைகள் மற்றும் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்றது இதில் பெரும்பாலானவை இராமாயணத்துடன் தொடர்புகொண்டவை என்று மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய குறைந்தது 40 இடங்கள் உள்ளன. இலங்கையில் ஐந்து சிவன் கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று திருகோணமலையில் உள்ளது. இது இராவணனால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது என்று மொரகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் விபீஷணன் வழிபட்ட பௌத்த விஹாரை ஒன்றும் இருப்பதாகவும் மொரகொட மகாராஷ்டிரா ஆளுநரிடம் கூறியுள்ளார்.

இதேவேளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து இலங்கையில் சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்க உள்ளன

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை விவாதித்து வருகிறது என்றும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: