பேலியகொடை வர்த்தக கட்டிட தொகுதியை நவீனமயப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆலோசனை!

Saturday, September 10th, 2022

பேலியகொடை வர்த்தக கட்டிட தொகுதியில் வர்த்தக கூடங்களை வர்த்தகத்திற்கு பொருத்தமான வகையில் வசதிகளை கொண்டதாக குறுகிய காலத்திற்குள் நவீனமாயப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஸ் ஹேரத் அதிகார சபையின் திட்டப்பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை குறைந்த செலவில் மேற்கொள்ளுமாறு அதிகார சபையின் தலைவர் இதன்போது அறிவுறுத்தினார்.

பேலியகொடை மெனிங் வர்த்தக கட்டிட தொகுதியை பார்வையிட்டதுடன் வர்த்தகர்களுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கலந்துரையாடினார்.

இதன்போது வர்த்தக கூடங்கள் சிறியதாக இருப்பதனால் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமம் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

இரவு நேரங்களில் வர்த்தக கட்டிட தொகுதியில் தேவையற்ற வகையில் தங்கியிருப்போரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தலைவர் பாதுகாப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: