பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி புதிய நகர்வு – வழங்கக்கூடிய அதிகபட்ச உதவிகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளரடன் ஆராய்வு!

Monday, September 12th, 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் கெனிச்சி யொகோயாமா (Kenichi Yokoyama) ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு பெற்றுக்கொடுக்க கூடிய ஒத்துழைப்புகள் குறித்து ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கக்கூடிய அதிகபட்ச உதவிகள் தொடர்பிலும், அதனை பல்வேறு துறைகளுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பிலும், கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இரு தரப்பினரால் வழங்ககூடிய ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு, இந்த கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்றும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: