பொருளாதார நெருக்கடியிலும் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Monday, February 20th, 2023
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், சந்தையில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை தற்போது ஸ்த்திர நிலையை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியமையினால் வாகனங்களின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது.
எனினும், தற்போது கேள்வி அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை ஸ்த்திரநிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாதணி விற்பனை நிலையமொன்றில் தீ!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி அவசியம் - சகல மாவட்ட பதிவ...
|
|
|


