பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடாவிடமிருந்து 3 மில்லியன் டொலர் நிதி உதவி!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பன இணைந்து விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதன் கீழ், இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உணவு, சுகாதாரம், போஷாக்கு வசதிகள், குடிநீர் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
விதை நெல்லுக்குப் பற்றாக்குறை : நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!
180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
எதிர்வரும் 15 ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப...
|
|