அடுத்த மாதம் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்லில் பேச்சுவார்த்தை!
Friday, October 21st, 2016
சர்ச்சைக்கரிய இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சசு தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர,கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பின் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

Related posts:
அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யமுடியாது - ஜனாதிப...
நாட்டின் பல பாகங்களில் மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீ...
|
|
|


