பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவிப்பு!

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே அதிகளவான பிள்ளைகளை சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோர் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் 2021 ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 124 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும், மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 08 பேருமாக 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
மேலும் பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறிந்து உண்மையில் அவர்களால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதா என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்க அனுமதிப்போம் எனவும் வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் குருபரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றும் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்பதோடு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அது குறித்து கவனம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|