பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் – நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம் – அமைச்சர் பிரசன்ன ஆலோசனை!

Monday, January 31st, 2022

நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்றுநோயே முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு நாடு மீண்டும் முடக்கப்பட்டால், தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை நாடு இன்று சந்தித்த பல நெருக்கடிகளுக்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பெரும் செலவை செய்ததால் இந்த நிலை ஏற்பட்டது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் தீவிர ...
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது - சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற...
டிசம்பர் மாதம் இறுதிக்குள் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய நடவடிக்கை நிறை...