பொருளாதார ஆர்வலர்கள் உள்ளடங்கிய 17 பேர் கொண்ட குழுவொன்றை நிறுவியது மத்திய வங்கி!

Saturday, August 13th, 2022

இலங்கை மத்திய வங்கியானது பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான அதன் ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் 17 பேர் கொண்ட ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியுள்ளது.

முன்னர் தொழிற்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து இந்த குழு நிறுவப்பட்டுள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபேரத்ன தலைமை வகிக்கின்றார்.

தனியார்துறை மற்றும் கல்வித்துறை சேர்ந்த நிபுணத்துவமிக்க 17 பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

ஒட்டுமொத்த பொருளாதாரம், குறிப்பாக நாணய மற்றும் நிதியியல் துறைகளின் அபிவிருத்தியினைக்கருத்திற் கொண்டு பொருளாதார நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு பற்றி தனியார் துறையினதும் கல்வித்துறையினதும அபிப்பிராயங்களையும் எண்ணப்பாங்குகளையும் எடுத்துரைப்பது இந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் முதன்மை பணியாகும்.

ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவின் ஆரம்பக் கூட்டம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றறிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பொது அமைப்புகளின் ஒற்றுமையிலேயே அந்தந்த பகுதியின் அபிவிருத்தி தங்கியுள்ளது - ஊர்காவற்றுறை பிரதேச சபை...
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைச...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியுடன் ...