பொருத்து வீடுகள் பெறுவதற்கு தென்மாராட்சி மக்கள் ஆர்வம்!

தென்மாராட்சி பிரதேசத்தில் பொருத்து வீடுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகத்தால் தென்மாராட்சி பிரதேச செயலகத்திதுக்கு 1000 படிவங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அவை ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டன. மக்கள் தொடர்ச்சியாக விண்ணப்பபடிவங்களைப் பெற வந்ததால் மாவட்டச் செயலகத்தின் அனுமதியுடன் பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள வர்த்தகர் படிவத்தை புகைப்பட பிரதி செய் பொது மக்களுக்கு நேற்று முன்தினமும் அதற்கு முதல் நாளும் விநியோகிக்கின்றனர். விண்ணப்ப முடிவு திகதிக்கு முன்னர் தென்மராட்சி பிரதேசத்தில் நிரந்தர வீடில்லாத 5ஆயிரம் குடும்பங்கள் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் நான்கு சபைகள் 20 ஆம் திகதி ஆரம்பம்!
பாரதத்தின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று! செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
ஜனாதிபதி தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரிய!
|
|