பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் – நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை!
Thursday, June 10th, 2021
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு குழு நேற்று கூடியதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்குமாறு நேற்று நுகர்வோர் விவகார அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இவ்வாறான சூழ்நிலையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது மாற்று வழிகளை கையாளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி!
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - 3568 நிலையங்களில் நாளையதினம் சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் - அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாக குழு ந...
|
|
|


