பொய்க்குற்றச்சாட்டு எனக் கூறி கொக்குவில் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், அதே பாடசாலையின் பழைய மாணவர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் கடமை முடிந்து வீடு திருப்பிக் கொண்டிருந்தபோது பாடசாலைக்கு அண்மையில் வைத்து இனம் தெரியாத சிலரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பழைய மாணவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“தவறு செய்யாதவனுக்கு சிறைவாசம், தவறு செய்தவர்களோ உல்லாசம், அகிம்சை வழிப் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள், சிறைக்குச் சென்ற மாணவனின் மனநிலை என்னாகும்“ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.
Related posts:
|
|