பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் முறையில் மாற்றம்!
Tuesday, July 9th, 2024
தொடருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகப்படுத்தபடவுள்ளது.
இதனை போக்குவரத்து மற்றும் அதிவேக வீதிகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இலத்திரனியல் விநியோகமுறை இவ்வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஆபத்தை விளைவிக்கக்கூடிய செத்தல் மிளகாய்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு டிஜிற்ரல் சிசி ஸ்கேனர் இயந்திரம் - சுகாதார அமைச்சு வழங்கிவைப்பு!
கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு - மக்கள் நடமாட்டமின்றி வெறிச...
|
|
|


