பொது நிறுவவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் எதிர்வரும் திங்கள்முதல் பொதுப்போக்குவரத்து சேவையை மேற்கொள்ள தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

நாளைமறுதினம் 20 ஆம் திகதி திங்கட்கிழமைக்குப் பின்னர் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களை பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக 5 ஆயிரம் அரச பேருந்துகளும், 400 புகையிரதங்களும் சேவையில் ஈடுபடும் என்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் தனியார் மற்றும் பொது நிறுவவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பொதுப்போக்குவரத்தை இயக்க போக்குவரத்து அமைச்சில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்போது, சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய நபர்களை பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஏற்றாதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|