பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!
Friday, February 10th, 2023
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான நிலையில், இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார்.
குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மழையுடன் கூடிய காலநிலை : டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு!
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் - பல்கலைக்கழக மா...
தொடரும் சீரற்ற காலநிலை - அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு!
|
|
|


