வெளிநாட்டுக் கடன் வேண்டாம்- மத்திய வங்கி ஆளுநர்!

Thursday, September 1st, 2016

நடப்பு வருடத்தின் எஞ்சியுள்ள நான்கு மாதங்களை சமாளிப்பதற்கு வெளிநாட்டுக் கடன் பெற வேண்டியிருக்காது என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களுக்கு மாறா வட்டிவிகிதமொன்றை பேணி, பொருளாதார சிக்கல்களை சமாளிக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலையின் கீழ் இந்த ஆண்டின் எஞ்சியுள்ள நான்கு மாதங்களுக்கும் வெளிநாட்டுக் கடன் பெற வேண்டிய தேவையிருக்காது. எனினும் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் காரணமாக இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.

தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீரான வேகத்தில் ஆரோக்கியமான முறையில் நகர்ந்து கொண்டிக்கின்றது. பெரும்பாலும் இந்த வளர்ச்சி வேகமானது 5.5 வீத வளர்ச்சி வேகமாக நிலைப்படுத்தப்படலாம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: