A/L பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் 29இல் ஆரம்பம்!

Tuesday, August 16th, 2016

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அடுத்த மாதம் 11ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் இதன் பொருட்டு 27 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய ஆறு பாடசாலைகள் முழுமையாகவும் 21 பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம் நாலந்தா வித்தியாலயம் கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகா வித்தியாலயம் கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை கண்டி சீதாதேவி பெண்கள் பாடசாலை ஆகியனவே இவ்வாறு முழுமையாக மூடப்படவுள்ளன.

அத்துடன் மூன்றாம் தவனைக்காக குறித்த பாடசாலைகள் அடுத்த மாதம் 13ம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பகுதியளவில் மூடப்படவுள்ள பாடசாலைகள் 21ம் மூன்றாம் தவணைக்காக இம் மாதம் 31ம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு எதிர்வரும் 3ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதன் நிமித்தம் 39 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன. இவற்றில் 35 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதோடு இவை மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5ஆம் திகதி திறக்கப்படும்.

பகுதியளவில் மூடப்படும் ஏனைய நான்கு பாடசாலைகளும் இம் மாதம் 31ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: