பொதுவெளி திரையிடல், நாடகங்கள், கச்சேரிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு – எதிர்வரும் ஓகஸ்ட் 15முதல் அமுலாகும் எனவும் அறிவிப்பு!

Sunday, August 13th, 2023

பொதுவெளிகளில் மேற்கொள்ளும் காட்சிகளுக்கு பெற வேண்டிய அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்நாட்டு, வெளிநாட்டு திரைப்படங்கள், திரைப்பட முன்னோட்டங்கள் (Trailer), மேடை நாடகங்கள், இசைக் கச்சேரிகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்துவதற்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிவித்தலுக்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் குறித்த கட்டண திருத்தங்கள் அமுலுக்கு வருகிறது.

இதற்கு முன்னர் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் அதன் முன்னோட்ட காட்சிகளுக்கு அறவிடப்பட்ட ரூ. 20,000 கட்டணமானது, ரூ. 40,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு திரைப்படங்கள் மற்றும் அதன் முன்னோட்ட காட்சிகளுக்கு அறவிடப்பட்ட ரூ. 10,000 கட்டணமானது, ரூ. 15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதிப்பத்திரத்தை ஒரே நாளில் பெறுவதற்காக, மேலதிகமாக 50% கட்டணம் அறுவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால், பொது அரங்காட்டல் (Public Performance) சட்டத்தின் கீழ் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: