பொதுப் போக்குவரத்து சேவைப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

Thursday, May 16th, 2019

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் ரயில்வே திணைக்களத்துக்கு 16 மில்லியன் வருமானம் கிடைத்துவந்த நிலையில், தற்போதைய வருமானம் 8 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் இது 50 வீத வருமான வீழ்ச்சி எனவும், ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் வருமானத்தில் 25 முதல் 30 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சபையின் பொது முகாமையாளர் ரொஷான் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளின் நாளாந்த வருமானம் 75 முதல் 80 மில்லியனினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts:

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அழைப்பு !
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா - அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அம...
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து உலக ச...