பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் – ஆணைக்குழுவின் தலைவர் உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு!
Friday, January 20th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையுடன், கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலுக்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு அழைப்பு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும், நான்கு பேர் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையில், ஏனைய மூவரும் ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல், ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, அதன் உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். காரைநகர்ப் பகுதியில் 36 கிலோக் கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!
வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையில் சர்ச்சை!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு புதிய மாற்றத்தை தரும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஸ...
|
|
|


