பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் -! சுகாதார சேவை பணிப்பாளர்!

இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
தேர்தல் நடத்த முடியுமா இல்லை என்பதனை கூறுவது எங்கள் செயற்பாடு அல்ல. அது தேர்தல் ஆணைக்குழுவினால் எடுக்கும் தீர்மானம்.
எனினும் தேர்தல் நடத்துவதென்றால் அதற்கு அவசியமான அனைத்து ஆதரவினையும் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நாளில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை - அரசாங்கம்!
சந்தேகத்திற்கிடமான லொறி - வான் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு!
தேயிலைத் தொழிற்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - ஆசிய அபிவிருத்தி வங்கி!
|
|