பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு !
Tuesday, March 3rd, 2020
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் பொதுத் தேர்தல் தொடர்பான தங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான சுற்றுநிரூபம் மற்றும் எழுத்து ஆவணங்களை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மாவட்டங்களுக்கான தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இடம் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல: நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள் – வடக்கு மாகா...
நாடு நாளை வழமைக்கு திரும்பினாலும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை - தனியார்...
சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்ய நடவடிக்கை - வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்த...
|
|
|


