பொதுத் தேர்தலை நடத்த சாதகமான ஏதுநிலைகள் இல்லை – உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!
Wednesday, May 20th, 2020
எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலைகள் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமான நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்து 10 வாரங்களுக்குப் பின்னர்தான் ஒரு பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தக் கூடிய சூழ்நிலை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


