சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் – நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?

Sunday, April 10th, 2022

பழைய அமைச்சரவையே நாளை புதிய அமைச்சரவையாக பதவியேற்கும் என்று அறியமுடிகின்றனது.

முன்பதாக நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் காட்டிவருகின்றன.

அதனடிப்படையில் மீண்டும் நாளை பழைய அமைச்சரவையே புதிய அமைச்சரவையாக பதவியேற்றுகும் என்று முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே

புதிய அமைச்சரவை நியமனம் அடுத்த வாரம் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளையும் நிறுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச அமைச்சர்கள் தற்போது அமைச்சுக்களில் கடமையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அரசியலமைப்பை மீறியதற்காக 2018 இல் நீதிமன்றத்திற்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இப்போது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை அரசியலமைப்பின் பிரகாரம் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: