பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக் கொள்வதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படவில்லை. அத்துடன் சமூக ஊடகங்களில் கருத்துரைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
குறித்த விடயத்தில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது
Related posts:
அரச ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க மலேசிய பூரண ஆதரவு!
வடமராட்சி கிழக்குக்கில் ஆசிரியர் பற்றாக்குறை: பின்னடிக்கின்றனர் என்கிறார் வலயப் பணிப்பாளர்!
ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 122 பில்லியன் ரூபாவை செலுத்த நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணத...
|
|