பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது – உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!
Monday, June 14th, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஒரு ரூபாவிலேனும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென்பதை தெளிவாக கூறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பொதுமக்களுக்கு இயலுமானவரை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பயணத் தடை காரணமாக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட போது, பேருந்து கட்டணத்தில் 20 வீத திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இந்த தடவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அதேநேரம் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


