இலங்கையில் முதியோர் தொகை அதிகரிப்பு -ஆய்வில் தகவல்!

Thursday, February 1st, 2018

வடக்கு மாகாணம் உட்பட இலங்கையில் முதியோர்கள் தொகை வேகமான அதிகரிப்பை முன்னிறுத்தியுள்ளது. இந்த அதிகரிப்பு தங்கி வாழ்வோர் என்ற தொகையில் மிகைச் சுமையை ஏற்படுத்துவதுடன் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேற்கொண்ட புதிய ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது.

2015 இன் பின்னர் புதிய அரசு பதவியேற்ற பின்னர் மூத்த பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், நலச் சேவைகள் மற்றும் சுகாதார வசதிகளின் அதிகரித்த நிலை என்பன இலங்கையில் அவதானிக்கப்படுகிறது. பன்னாட்டு தொழிலாளர் மையத்துடன் இணைந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் உற்பத்திதுறைக்கு உழைப்போர் தொகை குறைவடைந்துள்ளது. இதனால் படிப்படியாக பொருளாதாரக் கட்டமைப்பில் பெரும் தாக்கம் ஏற்படும் மற்றும் நுகர்வு, முதலீட்டிலும் தாக்கம் ஏற்படும் மேலும் மக்களின் வரிப் பங்களிப்புக்கள் வீழ்ச்சியடையும், சமூக நலன்புரி நடவடிக்கைகளில் வரிச் சுமை அதிகரிக்கும்.

குறிப்பாக மூத்த பிரஜைகளின் தொகை அதிகரிப்பால் பொருளாதார ரீதியாக செயற்படும் ஆட்களின் அளவு வீழ்ச்சியடையும். தொழிலாளர் படையின் புலம்பெயர்விலும் மாற்றம் ஏற்படும்.

மேலும் சமுகத்தில் மூத்த பிரஜைகளின் அதிகரிப்பு வேலைப்படையின் குறைப்புடன் நுகர்வு மட்டத்தை அதிகரித்து பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: