பேருந்து உரிமையாளருக்கு அபராதம்!
Friday, September 16th, 2016
வழித்தட அனுமதியை மீறிய பேருந்து உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், தீர்ப்பளித்தள்ளார்.
காரைநகர் – யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஊடாக கொழும்புக்கு செல்வதற்கு வழித்தட அனுமதியினை பெற்ற தனியார் பஸ்ஸின் சாரதி, அனுமதிப்பத்திரத்தை மீறி பருத்தித்துறை சென்று, அங்கிருந்த பயணிகளையும் ஏற்றியுள்ளார்.
வரணி பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கொடிகாமம் பொலிஸார், குறித்த பஸ்ஸை மறித்து சோதனையிட்டனர். அப்பொழுது அவர் அனுமதியை மீறிச் செயற்பட்டமை தெரியவந்தது.
பஸ்ஸில் பயணித்த பயணிகளை வேறு பஸ் ஒன்றில் ஏற்றி அனுப்பிய பொலிஸார், பஸ்ஸை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். பஸ் உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்த போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts:
தாதியர் பரீட்சைகள் ஒத்திவைப்பு!
அரசியல்வாதிகளின் தேவைக்காக எம்மால் தீர்மானம் எடுக்க முடியாது - மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் - சுகாதார அமைச்சு எ...
|
|
|


