பேருந்துகளில் மலேரியா நுளம்புகளைத் தேடி நடவடிக்கை!

மலேரியாவைப் பரப்பக்கூடிய நுளம்பு வகைகள் இருக்கின்றனவா என யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும்சொகுசுப் பேருந்துகளில் மலேரியாத் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.நகரை அண்டிய இடங்களில் மலேரியாவைப் பரப்பக்கூடிய ஒரு வகை இந்திய நுளம்பினம் இனம் காணப்பட்டதையடுத்துஅவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நகரை அண்டிய பகுதியில் காணப்படும் நுளம்புகள் ஏனைய இடங்களுக்குப் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் அனைத்து தனி-யார் பேருந்துகளிலும் நுளம்புகள் காவுவதனைத் தடுக்கும் வகையில் நுளம்பை இழுக்கும் கருவிகள் கொண்டு சோதனை இடம்பெற்றது.
இவ்வாறு சேகரிக்கப்படும் நுளம்புகள் மலேரியாவைப் பரப்பக்கூடியவைதானா என பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்தச் சோதனை நடவடிக்கை 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றது. 23 பேருந்துகள் சோதனையிடப்பட்டன.
பேருந்துகளில் சேகரிக்கப்பட்ட நுளம்புகள் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இல்லை என மலேரியாத் தடுப்பு இயக்கத்தின்பூச்சியல் ஆய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|