பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை!
Friday, December 6th, 2019
பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு அனைத்து பேக்கரி உரிமையாளர்களிடமும் கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகள் மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன அத தெரணவிடம் கூறியுள்ளார்.
அதற்கமைய 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாண் தவிர்ந்த உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கேக் வகைகளின் விலைகளையும் 50 ரூபாவால் குறைக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை - ஜனாதிபதி!
அதிக விலைக்கு அரசி விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அத...
கொவிட் பரவலை கட்டுப்படுத்த விரைவில் கொள்கை ரீதியான தீர்மானம் - சுகாதார அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு!
|
|
|


