நோய் நிலைமைகள் காணப்படின் பிள்ளைகளை பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோருக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Tuesday, February 8th, 2022

நோய் நிலைமைகள் காணப்படுமாயின் தங்களது பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

அவ்வாறு நோய் அறிகுறிகள் உடைய பரீட்சார்த்திகளை வைத்தியசாலைகளை அண்மித்து தயார்படுத்தப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையங்களுக்கு அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் சாதாரண பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியும்.

பரீட்சார்த்தி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகுமாயின் அவரை வைத்தியசாலையில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

எனவே, பரீட்சைகளின் போது உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: