பெற்றோல் குண்டு வீச்சு: பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
Thursday, June 22nd, 2017
யாழ். பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை(17) பெற்றோல் குண்டு வீசப்பட்டமை தொடர்பில் இளைஞரொருவர் நேற்றைய தினம் யாழ். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலோலி தென்மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் புதன்கிழமை(21) யாழ். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்த விரும்புகின்றோம் – மஹிந்த தேசப்பிரிய
அரசாங்க தகவல் திணைக்களத்தின் 7 ஆவது அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!
யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா ஓய்வு!
|
|
|


