பெறுபேறுகளை விடுமுறைக்கு முன்னர் வழங்க வேண்டும் – கல்வி அமைச்சின் செயலாளர்!
Tuesday, July 24th, 2018
தவணை பரீட்சைகள் நடத்தப்பட்ட பின்னர் அதன் பெறுபேறுகளை பாடசாலைகளின் தவணை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எட்டியாராச்சி அனைத்து அதிபர்களுக்கும் மாகாண கல்வி செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
தவணை பரீட்சை முடிவடைந்த பின்னர் அதன் பெறுபேறுகளை பாடசாலை விடுமுறைக்கு பின்னர் வழங்குதல், தாமதம் ஏற்படுவதினால் மாணவர்களின் கல்வியாற்றலையும் முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்வதற்கு பெற்றோர்களால் முடியாதுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் முன்னேற்ற அறிக்கை போன்று மாணவர்களின் ஆற்றல் தொடர்பான அறிக்கை முதலானவை அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை தவணை முடிவடையும் தினத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு முன்னதாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
அனர்த்தங்களால் பலியான 44 பாடசாலை மாணவர்கள்.
வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனி நீதிமன்றம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பல...
இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் - கல்வி அமைச்சு அதிரடி உத்த...
|
|
|


